‘நாடோடிகள் 2’ சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2009ஆம் வெளிவந்த நாடோடி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பத்து ஆண்டுகள் கழித்து இதே கூட்டணி மீண்டும் இணைந்து ‘நாடோடிகள் 2’ என்ற படத்தை உருவாக்கி உள்ளது

இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் 18ம் தேதி அதாவது நாளை மாலை 5.30 மணிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமார் அஞ்சலி முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்த படத்தை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் அதுல்யா ரவி, பரணி, நமோ நாராயணா, ஞானசம்பந்தம், சூப்பர் சுப்பராயன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ஏகாம்பரம் ஒளிப்பதிவில் கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

Leave a Reply