shadow

நாடு முழுவதும் வீடுகளுக்கு இலக்க ஆல்பா நியமரிக் டிஜிட்டல் குறியீடு: மத்திய அரசு திட்டம்

இந்தியா முழுவதும் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு டிஜிட்டல் முகவரி திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

‘பைலட் திட்டம்’ என்ற பெயரில் அஞ்சல் துறை சார்பில் ‘மேப் மை இந்தியா’ என்ற நிறுவனம் இந்த திட்டட்தை செயல்படுத்த உள்ளது. இதன்படி நாடு முழுதும் உள்ள அசையா சொத்துகளுக்கு மின்னணு முறையில் விலாசம் வழங்கப்படும். அதாவது வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றிற்கு 3 இலக்க பின்கோடடை சேர்த்து, 6 இலக்க ஆல்பா நியமரிக் டிஜிட்டல் குறியீடு வழங்கப்படும்.

இவ்வாறு அசையா சொத்துகளும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டதும், அவற்றின் பெயர், உரிமையாளர் பெயர், வரி விவரங்கள், மின்சாரம், குடிநீர் மற்றும் காஸ் குறித்த விவரங்களும் அதனுடன் சேர்க்கப்படும். இதன் மூலம் அனைத்து விவரங்களும் ஒற்றை தளத்தில் கொண்டு வர முடியும். இந்த 6 இலக்க குறியீட்டை கூகுள் மேப்பில் பதிவிட்டால், அது செல்ல வேண்டிய இடத்தை தெளிவாக காட்டிவிடும். சோதனை முயற்சியாக டில்லி மற்றும் நொய்டாவின் சில இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேப் மை இந்தியா நிர்வாக இயக்குநர் ராகேஷ் வர்மா கூறியதாவது: மின்னணு முறையில் இடங்களை தேடுவது என்பது, சுற்றுலா பயணிகள் மற்றும் பல இடங்களுக்கு செல்பவர்களுக்கு பெரிதும் உதவும். அவர்கள் குறிப்பிட்ட இடங்களை தேடவும், பகிர்ந்து கொள்ள பயன்படுவதுடன், பணம், நேரம், எரிபொருள் வீண்டிப்பு குறைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *