நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி? பாமக முக்கிய முடிவு

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி? பாமக முக்கிய முடிவு

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி இன்றி தனித்து போட்டியிடுவோம் என்று கூறிய கட்சிகள் கூட கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றன. குறிப்பாக பாமக, அதிமுக கூட்டணியை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது என்றும், கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு அளிக்கவும் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து யாருடன் கூட்டணி என்பது குறித்த முடிவை பாமக நிறுவனர் ராம்தாஸ் விரைவில் அறிவிப்பார் என தெரிகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.