நாங்குநேரியில் போட்டியிடுவது யார்? உதயநிதியா? குமரி அனந்தனா?

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று விட்ட எச்.வசந்தகுமார் தனது நாங்குனேரி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர உள்ளது

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக குமரி அனந்தனை களமிறக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியின் தீவிர முயற்சி செய்து வருகிறார். இதற்காக அவர் டெல்லியிடமும் பேசி அனுமதி பெற்று விட்டதாக கூறப்படுகிறது

ஆனால் திமுக தற்போது நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஒவ்வொரு எம்எல்ஏவும் திமுகவுக்கு தற்போது முக்கியம் என்பதால் நாங்குநேரி தொகுதியில் திமுகவே போட்டியிட விரும்புகிறது.

அது மட்டுமின்றி நாங்குநேரியில் உதயநிதியை களமிறக்கி வெற்றி பெறச் செய்து அவரை எம்எல்ஏ ஆக்க வேண்டும் என்பது முக ஸ்டாலின் கனவு என்று கூறப்படுகிறது

ஏற்கனவே முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு முன்னிலையில் நாங்குநேரி தொகுதியை திமுகவுக்கு காங்கிரஸ் கட்சியை விட்டு தர வேண்டும் என உதயநிதி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது

திமுக-காங்கிரஸ் கூட்டணியின் இடையே ஒருசில உரசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் நாங்குநேரி தொகுதியை எந்த கட்சி விட்டுக் கொடுக்கும்? எந்த கட்சியில் போட்டியிடும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply