நவாஸ் செரீப் வீட்டில் மோடி-தாவூத் இப்ராஹிம் சந்திப்பு நடந்ததா? திடுக்கிடும் குற்றச்சாட்டு

nawas and modiகடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த பாரத பிரதமர் மோடி, இந்தியா திரும்பும் வழியில் திடீரென பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு சென்று பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் குடும்ப விழா ஒன்றில் கலந்து கொண்டார். இந்த பயணம் இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களை மட்டுமின்றி உலக நாடுகளையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்நிலையில் இதே விழாவிற்கு மும்பை வெடிகுண்டு சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கலந்து கொண்டதாகவும், இவரை பிரதமர் மோடி சந்தித்து பேசியதாகவும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும், உத்தரபிரதேச மந்திரியுமான அசம்கான் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த சந்திப்பு நவாஸ் செரீப் வீட்டில் நடந்ததாக கூறும் அசம்கான் மேலும் இதுகுறித்து கூறியபோது, ‘‘சர்வதேச சட்டவிதிகளை மீறி பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் சென்றார். அங்கு அவர் தாவூத் இப்ராகிமையும் சந்தித்தார். இதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது’’ என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அசம்கானின் குற்றச்சாட்டை மத்திய அரசு உறுதியாக மறுத்து உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ‘‘இது முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரமற்றது’’ என்று குறிப்பிட்டார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *