Chennai Today News

நவம்பர் 7ல் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2′ டிரைலர்?

நவம்பர் 7ல் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2′ டிரைலர்?

உலக நாயகன் கமல்ஹாசன் தனது பிறந்த நாளை வரும் 7ஆம் தேதி கொண்டாடவுள்ள நிலையில் இந்த நாளில் அரசியல் குறித்த அதிரடி அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அரசியல் அறிவிப்புக்கு பதில் டிரைலர் வெளியாகவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து பேட்டி அளித்துள்ள இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான், ‘விஸ்வரூபம் 2′ படத்தின் டிரைலர் பணி முடிந்துவிட்டதாகவும், டிரைலர் மிக அருமையாக வந்துள்ளதாகவும், எந்த நேரத்திலும் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரலாம்’ என்று கூறியுள்ளார். எனவே சமூக வலைத்தளங்களில் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர் வரும் நவம்பர் 7ஆம் தேதி வெளிவரும் என்றே செய்திகள் வெளியாகி வருகின்றது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!