நவம்பர் 7ஆம் தேதி கட்சி தொடங்குகிறார் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் பரபரப்பான அரசியல் கருத்துக்களை கடந்த சில மாதங்களாக தெரிவித்து வருகிறார் என்பது அனைவரும் தெரிந்ததே. அவருடைய ஒவ்வொரு டுவிட்டிலும் அனல் பறந்ததால் ஆளும் கட்சி தலைவர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் எந்த நேரத்திலும் அதிகாரபூர்வமாக தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது வரும் நவம்பர் 7ஆம் தேதி, அதாவது தனது பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். நம் இயக்கத்தார் என்னுடனும், மக்களுடனும் தொடர்பு கொள்ள வசதியாக ஏற்பாடுகள் நடப்பதாகவும், தமிழகத்திற்கு கடமை செய்ய நினைப்பவர்களை இருகரம் கூப்பி வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் அரசியல் அறிவிப்பை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக மக்களே ஆவலுடன் இருக்கின்றார்கள். ஆனாலும் அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர் அவருடைய களப்பணியை பொருத்தே வெற்றி, தோல்வி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *