நல்ல குடும்பத்தை சேர்ந்தவன் நல்லா இல்லைன்னு சொல்ல மாட்டான்: விஜய் ரசிகரின் சர்ச்சை பதிவு

விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும், பழைய படங்களின் கோர்வையாக இருக்கின்றன என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

பெரும்பாலான ஊடகங்களும் நெகட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றன. அட்லி திரைக்கதையில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்றும் விஜய்யின் மாஸ்ஸை மட்டும் நம்பி படம் எடுத்துள்ளதாகவும் கூறி வருகின்றனர்

இந்த நிலையில் நெகட்டிவ் விமர்சனம் செய்பவர்களை விஜய் ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு விஜய் ரசிகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிகில் படத்தை நல்லா இல்லை என்று சொல்லும் நபர் நிச்சயமாக நல்ல குடும்பத்தை சேர்ந்தவனாக இருக்க முடியாது என்ன சாரியா நண்பா… இந்த படம் பெண்களுக்கான படம். மற்றும்… தளபதி விஜய் ரசிகர்களுக்கான வெறித்தனமான படம்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டுக்க்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *