நயன்தாரா தொடங்கும் மக்கள் இயக்கம்

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘அறம்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸில் கலெக்டர் பதவியை ராஜினாமா செய்யும் நயன்தாரா, மக்கள் இயக்கம் ஒன்றை தொடங்கவுள்ளதாக கூறுவதுடன் படம் முடிவடைந்திருக்கும்

இந்த நிலையில் விரைவில் உருவாகும் அறம் 2 படத்தில், நயன்தாரா தனது கலெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் இயக்கம் துவங்கி மக்களுக்காக போராடுவதே படத்தின் கதை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

அறம் 2 திரைப்படத்தின் மூலம் படத்தின் கரு அடுத்த தளத்திற்கு மேம்பட்டு சமூக பிரச்சனைகளை நிச்சயம் பேசும் என்றும், இந்த படமும் அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சனம் செய்யும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பிரச்சனைகளும் எழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *