நயன்தாராவுடன் நியூயார்க்கில் பிறந்த நாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் காதலர் என்று கூறப்படும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்த நாளை நியூயார்க்கில் காதலி நயன்தாராவுடன் கொண்டாடி வருவதாக செய்திகள் வெளிவந்தூள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் விக்னேஷ்சிவன் – நயன்தாரா இருவரும் நியூயார்க்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

‘நானும் ரெளடிதான்’ திரைப்படத்தை இயக்கியபோதே நயன்தாராவுடன் காதல் கொண்டதாக கூறப்படும் விக்னேஷ்சிவன், அதன் பின்னர் சினிமா விழாக்களுக்கு நயன்தாராவுடனே சென்றார். இதனால் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இன்று இந்த காதல் ஜோடி நியூயார்க்கில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

விக்னேஷ் சிவன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் பிசியாகவும், நயன்தாரா பல படங்களில் பிசியாகவும் இருக்கும் நிலையில் இந்த நியூயார்க் கொண்டாட்டத்திற்கு நேரம் ஒதுக்கியதில் இருந்தே இந்த இருவரின் காதல் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *