நம்பிக்கை தீர்மானம் வெற்றி! இலங்கையில் மீண்டும் பிரதமர் ஆகிறாரா ரணில்

ranilஇலங்கையில் கடந்த சில வாரங்களாக அரசியல் குழப்பநிலை இருந்து வந்த நிலையில் இன்று ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவான தீர்மானம் ஒன்று பாராளுமன்றத்தில் வெற்றி அடைந்தது. இதனால் அவருடைய ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானம் இலங்கை பாராளுமன்றத்தில் இன்று பெரும் பரபரப்புக்கு இடையே கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்தின்மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் ரணிலுகு ஆதரவாக 117 உறுப்பினர்கள் வாக்களித்ததால் இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. இதன் மூலம் மீண்டும் ரணில் பிரதமராவதற்கு முழுத்தகுதி கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது. இதனால் அதிபர் சிறிசேனா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *