shadow

நம்பிக்கையில்லா தீர்மானத்தை அடுத்து உரிமை மீறல் தீர்மானம்: தெலுங்கு தேச கட்சி முடிவு

மத்திய அரசுக்கு எதிராக கடந்த வாரம் தெலுங்கு தேச கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானம் தோல்வி அடையும் என்று தெரிந்தும், எதிர்க்கட்சிகளை மத்திய அரசுக்கு எதிராக இணைக்க இந்த தீர்மானம் உதவியது.

இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அடுத்து தற்போது தெலுங்கு தேசம் கட்சி பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடி கட்டி பிடித்ததற்காக ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்சனையை பாஜக கொண்டு வந்ததற்கு பதிலடியாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியதில் நாடாளுமன்றத்தை தவறாக வழி நடத்தியதற்காக, பிரதமர் மோடி மீதும், மத்திய அமைச்சர்கள் மீதும் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Leave a Reply