நடுவானில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதல்: பலி எண்ணிக்கை எவ்வளவு?

அமெரிக்காவில் நடுவானில் இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் உள்ள சுற்றுலா பயணிகள் காணும் காட்சிகளில் ஒன்று கெட்சிகன் நகரில் உள்ள தண்ணீரிலும் விமானங்கள் இறங்கும். இதனை ரசிக்க பயணிகளை விமானத்தில் அழைத்து் செல்வது வழக்கம். இதே போல கனடாவின் ராயல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் வந்த பயணிகளை இரு கடல் விமானங்களில் அழைத்துச் சென்றனர்.

விமானங்கள் மீண்டும் கெட்சிகன் நகருக்கு திரும்பி வந்த போது, எதிர்பாரதவிதமாக இரு விமானங்களும் மோதிக்கொண்டன. இதில் 11 பேருடன் சென்ற ஒரு விமானத்தில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேருடன் சென்ற விமானத்தில் மூவர் உயிரிழந்தனர். மேலும் இருவரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது

 

Leave a Reply