நடிகை ரிச்சா திருமணம் எப்போது? அவரே பதிவு செய்த டுவீட்

தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன’ மற்றும் சிம்பு நடித்த ‘ஒஸ்தி’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். இவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். மேலும் 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ‘மிஸ் இந்தியா’ அழகி போட்டியில் பட்டம் பெற்றவர்.

இந்த நிலையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த ஜோ என்பவரை திருமணம் செய்து கொள்ள போவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ரிச்சா கங்கோபாத்யாய் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு வருடத்திற்கு முன்னாள் பிஸின்ஸ் ஸ்கூலில் ஜோவை சந்தித்ததாகவும் அதன்பின் இருவரும் பழகியதாகவும் ரிச்சா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றேன் என்றும் திருமணம் நாள் பற்றி இன்னும் ஒருசில நாட்களில் தெரிவிப்பேன் என்றும் ரிச்சா கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *