நடிகைக்கு தெரியாமலேயே நடிகையை கர்ப்பமாக்கிய துணை நடிகர்: அதிர்ச்சி தகவல்

பிரபல டிவி மற்றும் சினிமா நடிகை ஒருவரை அவருடன் நடித்த துணை நடிகர் ஒருவர் அவருக்கும் தெரியாமலேயே கர்ப்பமாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மும்பையை சேர்ந்த டிவி நடிகை ஒருசில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் துணை நடிகர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்த நிலையில் இருவரும் சமீபத்தில் ஓட்டலில் ரூம் எடுத்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது மதுவில் போதை மருந்து கலந்து நடிகைக்கு துணை நடிகர் கொடுத்ததாகவும், அதன் பின்னர் அந்த நடிகையை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததையே போதையில் தெரியாத அந்த நடிகை மறுநாள் முதல் எப்போதும் போல் படப்பிடிப்பில் இருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென அவர் கர்ப்பமானதும்தான் தனது கர்ப்பத்திற்கு காரணம் அந்த துணை நடிகர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து நடிகை செய்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடிகையின் கர்ப்பத்திற்கு காரணமான துணை நடிகரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply