நடிகர் மோகன்பாபு இணைந்த அரசியல் கட்சி

பிரபல தெலுங்கு நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பருமான நடிகர் மோகன்பாபு, இன்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

நடிகர் மோகன்பாபு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியை இன்று சந்தித்து தன்னை அவருடைய கட்சியில் இணைத்து கொண்டதாக தெரிவித்தார்.

இருப்பினும் ஆந்திராவில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார் என்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அவர் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் இருவர்களான கமல்ஹாசன், மோகன்பாபு ஆகியோர்கள் அரசியலில் குதித்துவிட்ட நிலையில் ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *