நடிகராக மாறும் சுசீந்திரன்: மிஷ்கின், விக்ராந்த் உடன் நடிக்கும் படம்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது அவர் நடிகராக மாறிவிட்டார்.

ஆம், போக்கிரி ராஜா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களை இயக்கிய ராம்பிரகாஷ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் இயக்குனர் சுசீந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

சுசீந்திரனுடன் இயக்குனர் மிஷ்கின் மற்றும் விக்ராந்த் ஆகியோர்களும் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். கல்பத்ரு பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *