த்ரிஷாவின் ‘கர்ஜனை’ ரிலீஸ் எப்போது?

த்ரிஷா நடித்த ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம் ஏற்கனவே ஒருசில பிரச்சனைகள் காரணமாக ரிலீசாகாமல் இருந்து வரும் நிலையில் ‘கர்ஜனை’ திரைப்படமும் இரண்டு வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கியுள்ளது

இந்த நிலையில் படக்குழுவினர் எடுத்த முயற்சியால் தற்போது ‘கர்ஜனை’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் ‘கர்ஜனை’ திரைப்படம் வெளிவரவிருப்பதாக இந்த படத்தின் இயக்குனர் சுரேந்தர் பாபு தெரிவித்துள்ளார்.

த்ரிஷா, வம்சி கிருஷ்ணா, மதுமிதா, ஸ்ரீரஞ்சனி, வடிவுக்கரசி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *