தோல்விக்கு முடிவே இல்லையா? மீண்டும் தமிழ் தலைவாஸ் படுதோல்வி

புரோ கபடி போட்டி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி ஏற்கனவே 9 தோல்விகளை பெற்றுள்ளது. இதில் 7 தொடர் தோல்விகள் என்ற மோசமான சாதனையை வைத்துள்ள தமிழ் தலைவாஸ், இன்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள பாட்னாவுடன் 26 புள்ளிகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி பாட்னா அணியுடன் மோதிய நிலையில் பாட்னா அணி 51 புள்ளிகள் எடுத்தது. ஆனால் தமிழ்தலைவாஸ் அணி வெறும் 25 புள்ளிகள் மட்டுமே எடுத்ததால் பாட்னா அணி 26 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் அஜித்குமார் மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி 10 புள்ளிகள் அணிக்கு எடுத்து கொடுத்தார். ஆனால் பாட்னா அணியின் பாட்னா அணியின் பிரதீப் நார்வால் 26 புள்ளிகள் எடுத்தார் இது தமிழ் தலைவாஸ் எடுத்த மொத்த புள்ளிகளின் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *