தல தோனியின் ஓய்வு நேற்று மாலை அறிவிக்கப்பட்டதில் இருந்தே டுவிட்டரில் பல்வேறு விதமான டுவிட்டுக்கள் பதிவாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் தோனி மட்டுமின்றி தோனியின் ஜெர்ஸிக்கும் ஓய்வு கொடுத்து விடுங்கள் என்று பிசிசிஐக்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து ’இதுதான் நான் தோனியுடன் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் என்றும் உலக கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் குறித்த நினைவு எனக்கு அப்படியே உள்ளது என்றும் கூறியுள்ளார்

மேலும் தோனியை கவுரவிக்கும் விதமாக அவருடைய ஏழாம் நம்பர் ஜெர்ஸிக்கும் ஓய்வு கொடுத்துவிட வேண்டும் என்று பிசிசிஐக்கு நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply