தொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான 2017 டிசம்பர் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மார்ச் 14) வெளியிடப்பட உள்ளது.

தேர்வு முடிவுகளை புதன்கிழமை மாலை 6 மணி முதல் www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
தகுதியுள்ளோர் தேர்வுத் தாள் மறுமதிப்பீடு மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு ஆன்-லைன் மூ லம் மார்ச் 15 முதல் 22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மறுமதிப்பீடுக்கு தாள் ஒன்றுக்கு ரூ.1000 கட்டணமும், மதிப்பெண் மறுகூட்டலுக்கு ரூ. 300 கட்டணமும் செலுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *