shadow

தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

நம்முடைய மூதாதையர்கள் செய்த மருத்துவ முறைகளில் ஒன்று தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பது. இதற்கு பலவித காரணங்கள். இதனால் ஏற்படும் மருத்துவ பலன்கள் குறித்து பார்ப்போம்

தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

இவ்வாறு தொப்புளில் எண்ணெய் வைப்பதால் நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெய் அந்த நரம்புகள் வழியாக சென்று அவற்றை திறக்கும்.

ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

தொப்புளில் வைப்பதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும். இந்த செயலால் உள்ளுறுப்புக்களின் அபாயம் தடுக்கப்படுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான வாய்வுத்தொல்லையும் சரியாகும். சளி பிடித்தவர்கள், தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைத்தால் விரைவில் சரியாகும்.

Leave a Reply