தொடர்ந்து 13 ஆண்டுகளாக முதல் இடத்தில் ஆல்டோ


கடந்த நிதி ஆண்டில் அதிகம் விற்பனையான கார்களில் மாருதி நிறுவனத்தின் ஆல்டோ முதலிடத்தில் இருக்கிறது. இந்த கார் தொடர்ந்து 13-வது ஆண்டாக முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதி ஆண்டில் ஒட்டு மொத்த கார் விற்பனை 9.23 சதவீதம் உயர்ந்து 30.46 லட்சம் கார்கள் விற்பனையாயின். இதில் மாருதி சுசூகி மட்டும் 14.43 லட்சம் வாகனங்களை விற்றிருக்கிறது. மொத்த சந்தையில் 47.38 சதவீதம் மாருதி சுசூகி வசம் உள்ளது.

கடந்த நிதி ஆண்டில் மாருதி ஆல்டோ மாடல் கார் 2.41 லட்சம் விற்பனையாகி இருக்கிறது. முந் தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 8.27 சதவீத சரிவாக இருந்தாலும் ஆல்டோ தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது.

இரண்டாம் இடத்தில் வேகன் ஆர் இருக்கிறது. 1.72 லட்சம் வாகனங்கள் கடந்த நிதி ஆண்டில் விற்பனையாகியுள்ளன. முந்தைய நிதி ஆண்டில் 4-ம் இடத்தில் இருந்தது இந்த கார். மூன்றாம் இடத்தில் டிசையர் உள்ளது. இந்த மாடல் கார் 1.69 லட்சம் விற்பனையாகியுள்ளது. 1.66 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி நான்காம் இடத்தில் ஸ்விஃப்ட் இருக்கிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 மாடல் கார் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் இந்த மாடல் கார் 1.46 லட்சம் விற்பனையாகியிருக்கிறது. ஆறாம் இடத்தில் ஹூண்டாய் நிறு வனத்தின் எலைட் ஐ20 கார் இருக் கிறது. 1.26 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன்.

1.20 லட்சம் கார்கள் விற்பனை யாகி மாருதி பலெனோ 7-ம் இடத் திலும், ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் மாடல் 8-ம் இடத்திலும் இருக்கிறது. இந்த மாடல் கார் கடந்த நிதி ஆண்டில் 1.09 லட்சம் விற்பனையாகி இருக்கிறது.

9-ம் இடத்தில் மாருதியின் எஸ்யூவி ரக காரான விட்டாரா பிரிஸ்ஸா இருக்கிறது. இந்த கார் 1.08 லட்சம் விற்பனையாகி இருக்கிறது. மாருதி நிறுவனத்தின் செலிரியோ 97,361 கார்கள் விற்பனையுடன் பத்தாவது இடத்தில் இருக்கிறது. முதல் பத்து இடங்களில் ஏழு கார்கள் மாருதி நிறுவனத்தை சேர்ந்தவை, இரண்டு ஹூண்டாய் கார்கள் மற்றும் ரெனால்ட் நிறுவனதின் க்விட் காரும் விற்பனை அடிப்படையில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கின்றன

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *