தொடர்ச்சியான படப்பிடிப்பால் காய்ச்சலில் விழுந்த பிரபல நடிகர்!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா கடந்த சில நாட்களாக ஓய்வின்றி தொடர்ச்சியாக படப்பிடிப்பில் இருந்தார். அதுமட்டுமின்றி ஹோலி பண்டிகையையும் அவர் விடிய விடிய நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.

இந்த நிலையில் ஓய்வின்றி படப்பிடிப்பில் ஈடுபட்டதால் திடீரென விஜய் தேவரகொண்டாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று கறாராக கூறியதை அடுத்து மருத்துவமனையிலேயே இன்னும் நான்கு நாட்கள் விஜய் தேவரகொண்டா இருப்பாராம்.

விஜய் தேவரகொண்டா தற்போது ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து தமிழ் உள்பட 4 மொழிகளில் தயாராகவுள்ள ஹீரோ என்ற படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

Leave a Reply