தேவர் பிலிம்ஸ் இயக்குனர் தியாகராஜன் காலமானார்

தேவர் பிலிம்ஸ் இயக்குனர் ஆர்.தியாகராஜன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73. தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தை தோற்றுவித்த சாண்டோ சின்னப்பாதேவரின் மருமகனும், தேவர் பிலிம்ஸ் தயாரித்த பல திரைப்படங்களை இயக்கியவருமான ஆர்.தியாகராஜன், ரஜினிகாந்த் நடித்த ‘தாய் மீது சத்தியம்’, ‘தாய் வீடு’, ‘அன்புக்கு நான் அடிமை, ‘ரங்கா’ உள்பட பால் திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் தாய் இல்லாமல் நானில்லை, ஆட்டுக்கார அலமேலும் உள்பட இவர் மொத்தம் 28 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

சென்னை போரூரில் வசித்த வந்த தியாகராஜனுக்கு இன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் பலனின்றி அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். மறைந்த இயக்குனர் தியாகராஜனின் இறுதிச்சடங்கு நாளை காலை வளசரவாக்கத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *