shadow

தேர்தலுக்கு பின் தேமுதிக காணாமல் போகும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

தேமுதிக இதுவரை சந்தித்த தேர்தல்களில் கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து சந்தித்த தேர்தலில் மட்டுமே ஓரளவு நல்ல வெற்றியை பெற்றது. அதற்கு முன்னும் அதற்கு பின்னரும் சந்தித்த தேர்தல் அனைத்திலும் ஓரளவு வாக்கு சதவீதத்தை பெற்றிருந்தாலும் கிட்டத்தட்ட அனைத்து தொகுதியிலும் படுதோல்விதான். குறிப்பாக கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் உள்பட அனைத்து தேமுதிக வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இந்த நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, திமுக இரு கட்சிகளும் தேமுதிகவை கண்டுகொள்ளாமல் இருந்தால் அந்த கட்சி காணாமல் போய்விடும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது

இந்த நிலையில் தேர்தலுக்கு பின் தேமுதிக காணாமல் போகும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக காங்கிரஸ் பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது, வரும் பாராளுமன்ற தேர்தலில் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்றும், தேமுதிக உடனான நிலைபாடு கடைசிவரை இழுபறியாக இருக்கும் எனவும் தேர்தலுக்கு பின் தேமுதிக காணாமல் போகும் என்றும் விமர்சித்தார்.

Leave a Reply