தேர்தலில் போட்டியிடவில்லை. பாஜக பிரமுகர் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று, தனது இந்தூர் மக்களவை தொகுதிக்கு வேறொரு பாஜக வேட்பாளரை தாராளமாக அறிவிக்கலாம் என்றும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

வரும் மக்களவை தேர்தலில் பாஜக பிரபலங்கள் அனைவரும் கிட்டத்தட்ட மீண்டும் போட்டியிடும் நிலையில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தான் மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னரே மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தான் விரைவில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று குடும்பத்தினர்களுடன் நாட்களை கழிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply