தேர்தலில் பிரிந்த விஷால்-வரலட்சுமி ஜோடி மீண்டும் இணைந்ததா?

vishal-varalakshmiநடிகர் சங்க செயலாளராக சமீபத்தில் பதவியேற்ற நடிகர் விஷால், சரத்குமார் மகள் வரலட்சுமியை காதலிப்பதாக கடந்த சில வருடங்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அந்த செய்தியில் உண்மையில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக வெள்ள நிவாரண பணியில் தீவிரமாக இருக்கும் விஷாலுக்கு நடிகை வரலட்சுமி உறுதுணையாக இருப்பதாகவும், இருவரும் இணைந்து வெள்ள நிவாரண பணிகளை பொறுப்புடன் செய்து வருவதாகவும் புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் வெளிவந்துள்ளது.

எனவே இருவருக்கும் இடையே எவ்வித கருத்துவேறுபாடுகளும் இல்லை என்றும், இருவரும் மீண்டும் காதலர்களாக உலா வருவதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *