shadow

தேனிக்கு தல, குமரிக்கு தளபதி: ஒரு ஆச்சரிய தகவல்

தமிழக காவல்துறையின் சமீபத்தில் ’காவலன்’ என்ற செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலி பெண்களின் பாதுகாப்பிற்கு மிகவும் உபயோகமாக இருப்பதாக கூறப்படுவதால் பல பெண்கள் இந்த செயலியை டவுன்லோட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் தேனி மாவட்ட காவல்துறை தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் ஒரு காட்சியை வைத்து இந்த ’காவலன்’ செயலிக்கு விளம்பரம் செய்தது. இந்த விளம்பரம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த விளம்பரத்திற்கு பின் இந்த செயலியை டவுன்லோடு எண்ணிக்கை அதிகமானதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் தற்போது தளபதி விஜய்யின் சர்க்கார் படத்தில் ஒரு காட்சியை வைத்து இந்த செயலிக்கு விளம்பரம் ஒன்றை செய்துள்ளனர். இந்த விளம்பரம் தற்போது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தேனி மாவட்ட காவல்துறை தல அஜித்தையும், குமரி மாவட்ட காவல்துறை தளபதி விஜய்யையும் வைத்து விளம்பரம் செய்ததையடுத்து இன்னும் பிற மாவட்ட காவல்துறையினர் முன்னணி நடிகர்களின் படங்களை வைத்து விளம்பரம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *