தேங்காய் எண்ணெய் மட்டுமல்ல, தேங்காய் பாலும் சருமத்திற்க்கு நல்லது

தேங்காய் எந்த அளவுக்கு உடல் நலத்திற்கு ஆரோக்கியமோ அதே அளவிற்கு அதே அளவிற்கு முகம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் இது பாதுகாக்கிறது.

முகத்தின் அழகை பல மடங்காக மாற்ற ஒரு எளிய வழி இருக்கிறது. அதுதான் தேங்காய் பால் அழகியல் குறிப்புகள். இனி இந்த பதிவில் எப்படி தேங்காய் பாலை கொண்டு அழகு பெறலாம் என்பதை அறிந்து கொள்வோம்.

தேங்காய் பாலில் எண்ணற்ற மூல பொருட்களும், தாதுக்களும், வைட்டமின்களும் உடலின் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவும். தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம்.

வறண்ட சருமத்திற்கு

முகம் மிகவும் வறட்சியாக உள்ளதா..? பல வகையான வேதி பொருட்களையும் பயன்படுத்தி சோர்ந்து விட்டீர்களா..? இனி கவலையை விட்டு தள்ளுங்கள் நண்பர்களே. உங்களுக்கென்றே இந்த குறிப்பு உள்ளது.

தேவையான பொருட்கள் :

தேங்காய் பால் – 1/2 கப்
ரோஸ் நீர் – 1/2 கப்
ரோஜா இதழ்கள் – சிறிதளவு

செய்முறை :

முதலில் நீங்கள் குளிக்கும் நீரை சிறிது சூடுபடுத்தி கொள்ளவும். அடுத்து அந்த நீரில் தேங்காய் பால், ரேஸ் நீர், ரோஜா இதழ்கள் போன்றவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது இந்த நீரை குளியலுக்கு பயன்படுத்தி வந்தால் சருமத்தின் சொரசொரப்புகள் நீங்கி விடும். அத்துடன் உங்களின் உடல் மிகவும் மென்மையாகவும் ஈர்ப்பதத்துடனும் இருக்கும்.

இளமையான முகத்திற்கு

நீண்ட நாட்கள் இளமையாக இருக்க வேண்டுமென்றால் இந்த அழகு குறிப்பை பயன்படுத்தி வாருங்கள் நண்பர்களே. இது மிகவும் நல்ல பலனை ஒரு வாரத்திலே தரும்.

தேவையான பொருட்கள் :

பாதாம் – 6
தேங்காய் பால் – 1 ஸ்பூன்

செய்முறை :

முதலில் பாதாமை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் அந்த பாதாமை தோல் உரித்து கொள்ள வேண்டும். பிறகு, தேங்காய் பாலை சேர்த்து இவற்றை நன்கு அரைத்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து இளமையாக மாறுவீர்கள்.

பருக்கள் நீங்க

முகத்தின் அழகை கெடுத்து கொண்டிருக்கும் இந்த பருக்களை நீக்குவதற்கு முதலில் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்க வேண்டும். இந்த குறிப்பை தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் குணமாகும்.

தேவையான பொருட்கள் :

தேங்காய் பால் – 3 ஸ்பூன்
ஓட்ஸ் – 3 ஸ்பூன்

செய்முறை :

முகப்பருக்களை ஒழிக்க முதலில் ஓட்ஸை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து அதனுடன் தேங்காய் பால் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் பருக்கள் நீங்கும்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *