தெலுங்கானா தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் ஆலோசனை

election commissionதெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் நேற்று தனது அமைச்சரவையை ராஜினாமா செய்ததால் சட்டசபை கலைக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து இன்று ஆளுனரிடம் இருந்து முறைப்படி அறிவிப்பு வெளிவரும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் கலைக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திற்கு இந்த ஆண்டு டிசம்பரில் மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுடன் சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து இன்று அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக இன்று மாலை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *