shadow

தெலுங்கானாவின் முதல்வர் வேட்பாளரா விஜயசாந்தி

தெலுங்கானா மாகாணத்தில் சமீபத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தனது ஆட்சியை கலைக்கும்படி கேட்டுக்கொண்டார். இதனையடுத்து வரும் டிசம்பர் மாதம் அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு தயாராகி வருகிறது. தெலுங்கானா மாகாணத்தின் தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை விஜயசாந்திக்கு முக்கியத்துவம் தரும்படி ராகுல்காந்தி கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே காங்கிரஸ் வெற்றி பெற்றால் அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது

இந்த நிலையில் தெலுங்கானாவில் இப்போது தேர்தல் நடந்தால் சந்திரசேகரராவ் அமோக வெற்றி பெறுவார் என்று அடுத்தடுத்து வந்த கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்தது. தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு பா.ஜ.க. ஆதரவு அளிக்கும் என்று தெரிகிறது.

Leave a Reply