துப்பாக்கிகள் வெடிக்கும் சர்வாதிகாரத்திற்கு எதிராக: பார்த்திபன் கவிதை

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோலிவுட் திரையுலகினர் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ஒரு கவிதையை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த கவிதை இதோ:

பிணநாயகம்’ துப்பாக்கி வெடிக்கும் – தெரிந்தும்,
புரட்சி வெடிக்கும் – தெரியாமலும்
அதிகாரம் ஜனநாயகத்தை
ஒடுக்க நினைக்கிறது!

பசியால்
மார்பை நாடி வரும் சிசுவை
முலைக்காம்பே தோட்டாவாக இயங்கி சிதைத்து ரத்தமூட்டுதல் போல …
தம் மக்களை தாயே(அரசே)
கொன்று குவித்தால்?

உலகையே உலுக்கும் இந்த
இழவு சரித்திரம்
காக்கி சட்டையனிந்த
தூத்துக்குடியினருக்கு
உறுத்தாதா?
………..னால்
அந்த நாள்
துப்பாக்கிகள் வெடிக்கும் சர்வாதிகாரத்திற்கு எதிராக ….

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *