shadow

துப்பறிவாளன் படத்தை முடிந்தால் காப்பாற்றி கொள்ளுங்கள்: தமிழ் ராக்கர்ஸ்-தமிழ்கன் சவால்

நேற்று மாலை திருவல்லிக்கேணி காவல்துறை அதிகாரிகள் தமிழ் ராக்கர்ஸ் அட்மினை கைது செய்ததாக முதலில் தகவல் வெளிவந்தது. அதன்பின்னர் கைது செய்யப்பட்டது தமிழ் ராக்கர்ஸ் அல்ல, தமிழ் கன் அட்மின் என்று கூறப்பட்டது.

பின்னர் சில நிமிடங்கள் கழித்து இருவருமே அல்ல, ஆன்லைனில் இருந்து டிவிடி தயாரிப்பவர் என்றும், அவர் பெயர் கெளரிசங்கர் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விஷாலின் ‘துப்பறிவாளன்’ படம் வெளியாவதை அடுத்து பரபரப்புக்காக அப்பாவிகள் கைது செய்யப்படுவதாகவும், எங்கள் அட்மின் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது. மேலும் ‘துப்பறிவாளன்’ படத்தை முடிந்தால் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்றும் அந்த இணையதளங்கள் சவால் விட்டுள்ளன.

Leave a Reply