தீபிகா படுகோனேவிற்கு திடீர் மன அழுத்தம்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவாகிய தீபிகா படுகோனே பாலிவுட்டில் பிசியான நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் ரஜினிக்கு ஜோடியாக ‘கோச்சடையான்’ படத்தில் நடித்த இவர் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமது மனநிலை குறித்து விளக்கினார்.

தீபிகா படுகோன், மன நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே தமக்கு ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து பேசியதாக அவர் தெரிவித்தார். மன அழுத்தத்தை எதிர்கொள்ள தாம் மேற்கொண்ட பயிற்சிகளை விளக்கிய அவர், தமது உணர்ச்சிகள், எண்ணங்களை வெளியிட்டார்.

கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தீபிகா போன்றவர்களுக்கும் மன அழுத்தம் இருப்பதை நினைத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் ஆச்சரியம் அடைந்தனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *