shadow

தீபாவளி பண்டிகைக்கு 20,567 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

மேலும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் கோயம்பேடு, மாதவரம் உட்பட 30 முன்பதிவு மையங்கள் செயல்படும்என்றும், சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளா.ர்

இந்த சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் இயக்கப்படும் என்பதால் பயணிகள் தங்களுக்கு வசதியான தேதிகளில் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply