தில்லுக்கு துட்டு 2 ‘ ரிலீஸ் தேதி அறிவிப்பு !

சந்தானம் நடித்த ‘ தில்லுக்கு துட்டு ‘ படம் நகைச்சுவையோடு கூடிய த்ரில்லர் படமாக இருந்தது . இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘தில்லுக்கு துட்டு 2’ தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளதோடு மட்டுமல்லாமல் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ தில்லுக்கு துட்டு 2 ‘ படம் வரும் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி வெளியாக உள்ளதாக சந்தானம் அவரது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் . மேலும் இந்த படத்திற்கு தணிக்கை அலுவலக அதிகாரிகள் ‘ யுஏ ‘ சான்றிதழை வழங்கியுள்ளனர் .

இந்த படத்தில் சந்தானம் , அஞ்சால் சிங்க் , கருணாஸ் , ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராம்பாலா இயக்கத்தில் வெளியாக உள்ள இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார் . மேலும் ஒளிப்பதிவாளராக தீபக் குமாரும் படத்தொகுப்பாளராக கோபி கிருஷ்ணனும் உள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *