shadow

தில்லுக்கு துட்டு 2′ டீஸர் எப்போது ?

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் வெற்றியை அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார்.

‘தில்லுக்கு துட்டு 2’ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் போகி பண்டிகையை முன்னிட்டு இன்று இந்த படத்தின் டீஸர் வெளியாக உள்ளது. விரைவில் படத்தின் வெளியீடுகள் குறித்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலா இந்த படத்தையும் இயக்கியுள்ளார். எஸ்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

 

Leave a Reply