திறந்த வெளி பல்கலையில் பி.எச்.டி படிக்க போகிறீர்களா?

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பிஎச்.டி. படிப்பை மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 29 கடைசி நாளாகும்.

இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:
பல்கலைக்கழகத்தில் யுஜிசி அனுமதியுடன் தமிழ், ஆங்கிலம், மேலாண்மையியல், கல்வியியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், குற்றவியல், மின்னணு ஊடகவியல், புவியியல், கணினி அறிவியல், பண்டைய வரலாறு மற்றும் தொல்பொருளியல் ஆகிய துறைகளின் கீழ் பிஎச்.டி. படிப்புகள் வழங்கப்படுகின்றன.

யுஜிசி-யின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெற தகுதியுடைய மாணவர்கள், உதவித் தொகையுடன் இந்த ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள முடியும்.

இதற்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்தின் www.tnou.ac.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *