திரைப்படமாகிறது ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு.

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு தருவதாக ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட ஒருசிலர் உறுதி அளித்துள்ளனர்.

இந்த நிலையில், ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளதாகவும், இந்த படத்தில் அவரே நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.

ஸ்ரீரெட்டியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக எடுக்க தித்திர் பிலிம் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் ரவிதேவன், ரங்கீலா என்டர்பிரைசஸ் சித்திரைச் செல்வன் ஆகிய இருவரும் முன்வந்துள்ளதாகவும் இப்படத்திற்கு ‘ரெட்டி டைரி’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அலாவுதீன் என்பவர் இயக்க இருக்கும் இந்த படத்தில் புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். 70 சதவிகிதம் ரகசிய கேமரா மூலம் படமாக்க இருக்கிறார்கள். ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்கள் இப்படத்தில் இடம் பெற இருப்பதாக ஸ்ரீ ரெட்டி கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *