shadow

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவைத்திய வீரராகவர் கோவிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

சென்னை, காஞ்சீபுரம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் வந்து கோவில் வளாகத்தில் தங்கி இருந்தனர்.

நேற்று காலை அவர்கள் கோவில் குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப் பணம் செய்தனர். பின்னர் கோவிலில் சர்வ அலங்காரத் தில் இருந்த வீரராகவரை வழிபட்டனர்.

இதனால் கோவிலில் நீண்ட வரிசை காணப்பட்டது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலில் ஆடி திருவிழா 14 வாரங்கள் நடைபெறும். நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை விழா நடைபெற்றது.

இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்கத்து கிராம மக்கள் மாட்டு வண்டிகளில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு சென்றனர். வாரத்தில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து பெரிய பாளையத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது

Leave a Reply