திருவள்ளூர்-சென்னை ரயிலில் பிறந்த குழந்தை

திருவள்ளூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்ததால் அந்த ரயிலில் பயணம் செய்தவர்களிடையே பரபர்பபு ஏற்பட்டுள்ளது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கோரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கீர்த்தனா சென்னை எழும்பூர் அரசு தாய், சேய் நல மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக ரயிலில் தனியாக வந்து கொண்டிருந்தார். அவர் வந்த ரயில் வில்லிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து ரயில் பயணம் செய்தவர்களின் உதவியுடன் ரயிலிலேயே கீர்த்தனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

அதன்பின்னர் அந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்த பின்னர் தாய், குழந்தையை மீட்ட ரயில்வே போலீசார் உடனடியாக அவரச உதவி மையத்தில் முதலுதவி அளித்தனர். இதையடுத்து இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *