திருமண ரிசப்ஷனில் பெல்லி டான்ஸ்: மணமகன் உள்பட 8 பேர் கைது

திருமண ரிசப்ஷன் நிகழ்ச்சியில் அனுமதி இன்றி பெல்லி டான்ஸ் நிகழ்ச்சி நடத்தியதாக மணமகன் உள்பட 8 பேர் தெலுங்கானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பஹ்மத் என்பவருக்கு திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றது நேற்று நடந்த ரிசப்ஷன் நிகழ்ச்சியில் மும்பை மற்றும் டெல்லியில் இருந்து பெல்லி டான்சர்கள் வரவழைக்கப்பட்டனர். டான்சர்கள் அனைவரும் ரஷ்ய பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண ரிசப்ஷன் நிகழ்ச்சியில் பெல்லி டான்ஸ் நடப்பது குறித்து கேள்விப்பட்ட தெலுங்கானா போலீசார் விரைந்து வந்து மணமகனையும் இந்த டான்ஸ் குழுவினர்கள் 8 பேர்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இரவு ஒரு மணிக்கு மேலும் அதிக சத்தத்துடன் டான்ஸ் நிகழ்ச்சி நடந்ததால் அருகில் இருந்த வீட்டில் உள்ளவர்கள் கொடுத்த புகார் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *