திருமணம் முடிந்த அடுத்த நாளே தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி

ஆந்திர மாநிலத்தில் காதல் ஜோடி ஒன்று வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட அடுத்த நாளே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றின் மூன்றாமாண்டு மாணவர் பட்டுல்லா சந்தீப் என்பவரும், அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வரும் மாணவி போகிரெட்டி மவுனிகா என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இந்த காதல் இருதரப்பு குடும்பத்தாருக்கும் தெரியவந்ததால் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த காதலர்கள் உடனடியாக திருமணம் செய்து கொள்வதற்காக நேற்று முன் தினம் வீட்டைவிட்டு வெளியேறினர். இந்த விஷயம் இருவரின் நண்பர்கள் வட்டாரத்திற்கு மட்டுமே தெரிந்துள்ளது. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறியிருந்த அடுத்த நாளே பிரகாசம் மாவட்டத்தில் உள்ள வெட்டப்பலம் ரயில் நிலையத்திற்கு அருகே தணடவாளத்தில் நேற்று இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் நண்பர்களிடம் கூறியபடியே விஜயவாடாவில் இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் அன்று இரவே தாங்கள் தற்கொலை செய்ய போவதாக அவர்கள் இருவரும் நண்பர்களுக்கு அலைபேசியில் எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிய வந்தது. திருமணத்திற்கு பிறகு பெற்றோரின் எதிர்ப்பை சமாளிக்க பயந்தே அவர்கள் இந்த விபரீத முடிவினை எடுத்ததாகத் தெரிகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *