திமுக தான் பாஜகவின் ‘பி’டீம்: கமல்ஹாசன் பேச்சு!

காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த இடங்களை கொடுக்கும் கட்சிதான் பாஜகவின் ‘பி’டீம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை அனைத்து மாநிலங்களிலும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதுதான் பிஜேபியின் நோக்கம். இதை அவர்களே பல மேடைகளில் கூறி இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் தேசிய கட்சியான பாஜகவுக்கு கௌரவமான தொகுதிகள் ஒதுக்காமல் குறைந்த தொகுதிகளை அளிக்கும் கட்சிதான் பிஜேபியின் ‘பி’டீம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்

மேலும் வேலையை தேடி இளைஞர்கள் செல்லக்கூடாது என்றும் வேலை தான் இளைஞர்களை நோக்கி வர வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.