shadow

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பின்னடைவு: காவேரி மருத்துவமனையில் குவிந்த தொண்டர்கள்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 25ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்களின் அறிக்கை தெரிவித்தது.

ஆனால் சற்றுமுன் வெளியான காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியானது. இதன்படி திமுக தலைவர் கருணாநிதியின் வயது மூப்பு காரணமாக அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது என்றும், கருணாநிதி தொடர்ந்து மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு மருத்துவ உதவியும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும், கருணாநிதியின் உடல் நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை அடுத்த 24 மணி நேரம் கண்காணிக்க வேண்டி நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply