shadow

திமுக தலைவரான ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி வாழ்த்து

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் முறைப்படி அறிவிக்கப்பட்டார். திமுகவின் இரண்டாவது தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலினுக்கு திமுகவினர் மட்டுமின்றி மாற்றுக்கட்சியினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள். மகிழ்ச்சியோடும் வெற்றியோடு அவர் தனது புதிய அரசியல் பயணத்தை தொடங்க எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

Leave a Reply