திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்

திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்டு சென்றார். அவருடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றுள்ளார். லண்டனில் ஒரு வாரம் தங்கியிருந்து, பின்னர், ஸ்டாலின் சென்னை திரும்புவார் என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன

மு.க.ஸ்டாலின் லண்டனுக்கு செல்லும் பணி குறித்த தகவலை திமுக தலைமை அறிவிக்கவில்லை என்றாலும் அவர் மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நேற்றுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததை அடுத்து ஸ்டாலின் நேற்றிரவு லண்டனுக்கு சென்றுள்ளதாகவும், லண்டனில் இருந்தால் அவர் கட்சி பணிகளை அவ்வப்போது கவனித்து வருவார் என்றும் கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *