shadow

திமுகவை பிரதமர் கூட்டணிக்கு அழைக்கவில்லை: தமிழிசை

டெல்லியில் நடைபெறும் பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன், அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கூட்டணி குறித்து பிரதமர் மோடி கூறியதை திமுகவைத்தான் அழைத்ததாக மு.க.ஸ்டாலின் அர்த்தப்படுத்திக்கொள்வது ஏன்? எனக் கேள்வி எழுப்பியதோடு பாஜகவுடன் கூட்டணி அமைக்க திமுகவிற்கு ஆசையா? என்றும் தமிழிசை வினவினார்.

தமிழகத்தில் கூட்டணி குறித்து நேற்று பிரதமர் தெரிவித்த கருத்துக்கு மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கலாச்சாரத்தைப் பின்பற்றி பழைய நண்பர்களை வரவேற்க விரும்புவதாகவும், கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருப்பதாகவும் பிரதமர் மோடி கட்சி நிர்வாகிகளுடன் பேசும் போது குறிப்பிட்டதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு நிலையான ஆட்சி தேவை என்ற ஒரே நோக்கத்திற்காகவே அப்போது பா.ஜ.க இடம்பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக கூட்டணி வைத்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் தற்போது பிரதமர் நரேந்திரமோடி வாஜ்பாயும் அல்ல, அவர் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வாஜ்பாய் உருவாக்கியது போன்றதொரு ஆரோக்கியமான கூட்டணியும் இல்லை என்றும் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எனவே பாரதிய ஜனதாவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என மீண்டும் விளக்கிட விரும்புவதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply