shadow

திமுகவை கமல் விமர்சிப்பது ஏன்? ஜெ.அன்பழகன் டுவீட்

கடந்த சில நாட்களாக திமுகவை கமல் விமர்சிப்பதும், அதற்கு திமுகவினர் பதில் அளித்து வருவதுமான செய்திகள் ஊடகங்களில் இடம்பெற்று வருகிறது. போகிற போக்கை பார்த்தால் திமுகவுக்கும் கமல் கட்சிக்கும் போட்டி என்ற நிலை உருவாகிவிடும்போல் தெரிகிறது

இந்த நிலையில் திமுகவை கமல் தொடர்ந்து விமர்சிப்பது ஏன் என்பது குறித்து திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் அவரது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இடம் கிடைக்காத காரணத்தால் திமுகவை, ஊழல் கட்சி என்று கமல்ஹாசன் விமர்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணிக்கு கமல் முயற்சிக்கவில்லை என்றும், காங்கிரஸ் கட்சியுடன் தான் அவர் கூட்டணி வைக்க விரும்பியதாகவும், ஆனால் காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி என்பதால் கமல் ஏமாற்றம் அடைந்திருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *